கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் காணப்படுகின்றது. இந்த கட்டத்தில் நாம்Continue Reading

ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மை காலமாக விமானங்கள்இ பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா விமானம்Continue Reading

வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் பயணித்து, கடந்து செல்ல உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சி/2023 ஏ3 என பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், 2023-ம் ஆண்டு ஜனவரியில் வானியலாளர்களால் கண்டறியப்பட்டது. 2024 ஆண்டின் செப்டம்பர் 28-ம் திகதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது. இதனால், பூமியிலிருந்து இதனை நாம் காணContinue Reading

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்தியவம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிரContinue Reading

மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் தனது வயது 86 வயதில் அண்மையில் உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தன் டாடாவின் பூதவுடல் மும்பையில் உள்ள வொர்லிContinue Reading

கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட விண்கலங்களில் மிகப்பெரியதான நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலமானது, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. யூரோபா கிளிப்பரினால், ஈர்ப்பு உதவிகளை பயன்படுத்தி 1.8 பில்லியன் மைல்கள் பயணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2030ஆம் ஆண்டில், வியாழனை அடைந்த பிறகு, அது யூரோபாவில் வாழக்கூடிய நிலத்தடி கடலை பற்றி ஆராயContinue Reading

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரில் கொலை சம்பவத்தை அடுத்து, இந்தியா – கனடாவுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (14) வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்,Continue Reading

வலுபெற்றுவரும் கொரிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களுக்கு மத்தியில், தென்கொரியாவுடனான முக்கிய இணைப்புப்பாதைகளை வடகொரியா வெடிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது நாட்டு வான்பரப்புக்குள் தென்கொரியா ட்ரோன்களைப் ஏவியதற்காக இந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரிய இராணுவம் கடந்த வாரம் அதன் தெற்கு எல்லையை நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதியளிப்பின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவை தனது நாட்டின் முதன்மைContinue Reading

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும்Continue Reading

காசாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேலிய படையினர் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியாவை குறிவைத்துத் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். ஹமாஸ் அந்த பிராந்தியத்தில் மீண்டும் தமது கட்டமைப்புக்களை ஸ்தாபிக்க முனைவதைத் தடுப்பதற்காகவே யுத்த தாங்கிகளுடன் அந்த பிராந்தியத்தை சூழ்ந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.Continue Reading