அமெரிக்க சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை..!!

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *