ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

ஷேக் ஹசீனாவை கைது செய்ய வங்கதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் பிரதமரின் அதிகார பூர்வ இல்லத்திற்குள் புகுந்ததையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதன் பின் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது. இந்நிலையில், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிContinue Reading

மலேஷியாவில் பாரிய அளவிலான மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு ஒன்றின் போது இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட மதக் குழுவொன்றைச் சேர்ந்த 171 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் மனித கடத்தலுக்கு தயார்படுத்தப்பட்டிருந்த மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 402 சிறுவர்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Continue Reading

செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் அங்கு வந்திருந்த புத்த துறவிகளுக்கு புத்தாடை வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார். அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, தான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய தனது உரையை நினைவு கூர்ந்தார். அப்போது பேசியContinue Reading

கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் நாடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் திகதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில்,Continue Reading

ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்தவகையில் உக்ரேனுக்கு போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுத உதவிக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் தனது பதவி காலத்தில் கடைசியாக, போர் நிலவரம் குறித்து உக்ரேனுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும்Continue Reading

இந்திய எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்தContinue Reading

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலி இருந்து வருகிற நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீதுContinue Reading

கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் காணப்படுகின்றது. இந்த கட்டத்தில் நாம்Continue Reading

ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மை காலமாக விமானங்கள்இ பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா விமானம்Continue Reading