10 இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்..!!

ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மை காலமாக விமானங்கள்இ பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் பெங்களூரு நோக்கிஇ 130 பயணிகளுடன் சென்றது.

அப்போது ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே விமானத்தை அகமதாபாத்தில் தரையிறக்குவதற்கு முடிவு செய்தார். இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு விமானத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனா்.

ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அப்போது தான் அது வெறும் புரளி என்பது தெரிந்தது. இதையடுத்து விமானம் பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் புறப்பட்டு சென்றனா்.

இதேபோல் கடந்த 48 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 10 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் விமான பயணிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *