80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அதிசயம் – இந்திய வானில் பார்க்கலாம்…!!

வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் பயணித்து, கடந்து செல்ல உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சி/2023 ஏ3 என பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், 2023-ம் ஆண்டு ஜனவரியில் வானியலாளர்களால் கண்டறியப்பட்டது.

2024 ஆண்டின் செப்டம்பர் 28-ம் திகதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது.

இதனால், பூமியிலிருந்து இதனை நாம் காண முடியும். அடுத்த 80,000 ஆண்டுகளுக்கு இதனை நாம் காண முடியாது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது, அதன் நீண்ட வால் போன்ற பகுதியை நாம் தெளிவாக பார்க்க முடியும்.

காலையில் சூரிய உதயத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என வானியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *