இன்று (24) முதல் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்வுகளுக்கு முழுமையான அனுமதி

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க இன்று (24) முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இதன்படி, திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Next Post

தடுப்பூசிக்கும் கட்டுப்படுத்த முடியாத புதிய வகையான வைரஸ் தொற்று

Fri Nov 26 , 2021
கொவிட் வைரஸின் மற்றுமொரு புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த புதிய வைரஸ் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், ஹெங்கொங் உள்ளிட்ட சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மீறிய வலுவை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu