சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளனர். மூன்றாம் தவணை மூலம் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நன்மைகளை மக்கள் நேரடியாகப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர். […]

போர்க்குற்றம் புரிந்ததாகக் கண்டறியப்பட்ட இலங்கை இராணுவத்தின் தளபதிகளுக்கு எதிராக சர்வதேச அதிகார வரம்பிற்குட்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பல நாடுகள் தற்போது இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கையின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால், வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்ட போதிலும், இராணுவத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய தேசியப் பாதுகாப்பு […]

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டளவில் இந்த […]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண் வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். அத்துடன், சிவில் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் வேட்பாளரை களமிக்குவதற்கே முனைப்பு காட்டுவதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இம் மாதத்தில் இதுவரையில் 112,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம் மாதத்தில் ஐரோப்பாவில் இருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும், 6.9% அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு (2024) இதுவரை இலங்கைக்கு வருகை […]

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையம் ஒன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விமானப்படை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இப் பிரதேசத்தில் பல தடவைகள் சிகிச்சை பெற்ற ஒருவரை பயன்படுத்தியே குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருந்தகத்திற்கு எதிராக நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் […]

இலங்கை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்றையதினம் (15) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என உறுதியளித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் Isoflurane மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை இன்று பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்து பரிமாற்றம் செய்யும் மோசடி கும்பல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிறுவனங்கள் மாத்திரமே வெளிநாட்டு நாணயத்தை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் பிரதான விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யும் […]

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu