மண்சரிவில் புதையுண்ட மூவர் உயிரிழப்பு காணாமல் போனவர்களை தேடி மீட்பு பணி ஆரம்பம்

கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.

தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காயமடைந்த நபர் ரம்புக்கன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகளுக்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

ஆரம்பகட்ட தகவல்களுக்கு அமைய 4 பேர் காணாமல் போயுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

எனினும், வீட்டில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என அவர் கூறுகின்றார்.

பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Next Post

மூன்று பெண் பிள்ளைகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Tue Nov 9 , 2021
திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று பெண் பிள்ளைகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு 12 இல் வசிக்கும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் திங்கட்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறி இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடைசியாக திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போன பிள்ளைகளின் குடும்ப உறுப்பினர்களிடமும் பொலிஸார் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu