புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை கேட் மிடில்டன் சந்திக்க சென்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் சமூக சந்திப்புகளில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் முதன்முதலில் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனையடுத்து,Continue Reading

அமெரிக்கா புளோரிடாவில் மில்டன் சூறாவளி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சூறாவளியின் தாக்கம் காரணமாக சுமார் 3 மில்லியன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது என அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தபோது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். அதில், 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை,Continue Reading

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 இன் தலைவர் கென் மக்கலம் எச்சரித்துள்ளார். பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கென் மக்கலம் , ரஷ்யா நாசவேலைகள் உட்பட ஆபத்தான நடவடிக்கைகளை பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பிரிட்டன் ஆதரித்தமைக்காகவே ரஷ்யா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2022 முதல்Continue Reading

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் (07) ‘கிம் ஜாங் உன்’ பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.Continue Reading

காசா முனை மீது இஸ்ரேல் ஓராண்டாக அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த தாக்குதலில் இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42,010 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97,720 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பதுContinue Reading

இந்திய தொழில்துறையில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுமை விரும்பியாகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா, இளைஞர்களுக்கு வழிகாட்டி, முதலாளிகள் பின்பற்ற வேண்டிய அடையாளம். ரத்தன் டாடா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா, வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 7ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்Continue Reading

ஈரான் மீதான தங்களின் தாக்குதல் கொடூரமானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவுடனான சந்திப்பை அடுத்து பேசிய அமைச்சர், கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலானது ஆக்ரோஷமானது ஆனால் துல்லியமற்றது என்றார். சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியிருந்தது. அதில் சுமார் 90 சதவிகிதம் இலக்கை அடைந்தது என்றே ஈரான் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், ஈரானுக்குContinue Reading

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (09) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சைContinue Reading

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார். கடந்த திங்கட்கிழமை (07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடாContinue Reading