ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஐ.நா மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர்Continue Reading

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏறடுத்திய நிலையில், அந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. எல்லா விமானங்களிலும் பொதுவாகContinue Reading

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் போட்டி நடத்தப்பட்டது. ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் 526 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது. இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எடை கூடியது, அழகான, நீளமான, பெரிய என பல்வேறு வகைகளில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. தர்பூசணி காய்களுக்காகவும் இவ்வாறான போட்டி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் எடை கூடிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனைContinue Reading

2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர். வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லதுContinue Reading

இஸ்ரேலிடம் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார். லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்’ என்று டெஹ்ரானில் நிகழ்த்திய உரையில் கமேனி குறிப்பிட்டார். இதில் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணைContinue Reading

தென்னாப்ரிக்காவில் வடகிழக்கு ஜோஹன்னஸ்பெர்க்கின் லிம்போபோ மாகாணத்தில், நடந்த இந்த சம்பவம், நாட்டின் வெகு காலமாக நிலவும் இனவாத, பாலின பாகுபாட்டின் கொடூரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது ஒரு சம்பவம். தென்னாப்ரிக்காவில் வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் செல்வதுண்டு. அதுபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சென்ற இரண்டு கறுப்பின பெண்கள் திரும்பவில்லை. இந்நிலையில் மரியாContinue Reading

சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், எலான் மஸ்க் அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் . அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள்Continue Reading

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பிரதேசத்திலேயே இராணுவ நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவர் எனக்Continue Reading

வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும் பல்வேறு கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமானContinue Reading

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல் குமெய்னி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் மிகக் குறைந்த அளவிலான ஓர் தண்டனை என அவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஈரானிய படையினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் பூரணமாக சட்டரீதியானதுContinue Reading