இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் இதனை தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் கூறுகையில், நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை,நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என தீர்மானிப்பது உங்கள் மக்களைContinue Reading

கடந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விசா பிரச்சினை காரணமாக நிலைமை மோசமாகியுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்தவுடன் விசா பெற வேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் குழுவாக வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிற்கு வருவதற்கு முன்னர் விசாவைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதனைContinue Reading

2024 செப்டம்பர் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை சீசெல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டேனி ஃபௌரே தலைமையிலான பொதுநலவாய கண்காணிப்புக் குழு கண்காணிக்கவுள்ளது. இது தொடர்பான 15 பேர் கொண்ட குழுவை, பொதுநலவாய செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் பெயரிட்டுள்ளார். இலங்கையின் தேர்தல்கள் ஆணையகம் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த குழு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு, செப்டம்பர் 15 முதல் 27 வரை இலங்கையில்Continue Reading

சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையம் மூலமான நிதி மோசடிகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையினர், சீனாவின் சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியுள்ளனர். அண்மைய நாட்களில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இணைய நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் ஏராளமான சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும், சந்தேக நபர்களின் மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் உள்ள தரவுகள் சீன மொழியில் இருப்பதால் விசாரணைகள் தடைப்பட்டுள்ளன.Continue Reading

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பிலும், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரானது ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்தContinue Reading

பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது. இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெரிய வெங்காய விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்குContinue Reading

2024 ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும்Continue Reading

கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் இன்று சீல் வைக்கப்பட்டு, சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.  Continue Reading

கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நிலைமைகள் தொடர்பில் தாய்மார்கள் கவனம் செலுத்தப்படாவிட்டால், கருச்சிதைவு ஏற்படும் போக்கு ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என அறிக்கைகளை மேற்கோள் காட்டி வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது, ​​நாட்டில்Continue Reading

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில், 2019 முதல் 2023 வரை கடற்படை 537 அதிகாரிகளையும் 17,734 மாலுமிகளையும் பணியமர்த்தியுள்ளது. இதன்போது ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை முறையே 580 மற்றும் 17,734 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading