உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரலாற்றில் பதிவாகும் வகையில் பாரியளவில் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்Continue Reading

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில், நாடு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றால், இந்த நிலைContinue Reading

அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை விமானப்படை உடனான நீண்டகால ஒத்துழைப்பின் காரணமாக பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானம் ஒன்றே அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் 2022 இன் பிற்பகுதியில் நிறைவு செய்யப்பட்ட நிலையில் ரேடார் மற்றும் கமராக்கள் போன்ற கடல் உந்துவிசை சென்சார் உள்ளிட்ட கூடுதல் மேம்படுத்தல்களுடன் 2024Continue Reading

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இலங்கை பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்தின் சிறுவர் சுரண்டல் எதிர்ப்புக் குழுவின் விசாரணையாளர்களை இது தொடர்பில் சந்தித்துள்ளனர். இணையங்களில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து எதிர்த்துப் போராடுவதில், இலங்கை பொலிஸின் சர்வதேச வலையமைப்பு முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பெண்கள் மற்றும்Continue Reading

உலகின் மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு நேற்று (05) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம், கணிசமான கோடை வரைவு 17.027 மீட்டர் மற்றும் அதன் செயல்பாட்டு திறன் மற்றும் சரக்கு திறனை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது . சுமார் 400 மீற்றர்Continue Reading

இந்தியாவில் (India) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விமானப் போர் பயிற்சியான “தரங் சக்தி”யின் (TARANG SHAKTHI) தொடக்கப் பதிப்பில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் (Beechcraft) விமானம் பங்குபற்றி வருகின்றது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த பயிற்சியில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் 18 நாடுகளின் பார்வையின் கீழ் பங்குபற்றி வருகின்றன. இதற்கமைய, தாரங் சக்தியின் முதல் கட்டம், இந்தியாவின்Continue Reading

இலங்கையில் , புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 50,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் முதல் தொகுதி எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தினசரி வழங்கல்Continue Reading

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவரா தெரிவித்துள்ளார். இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளின் சவர்க்காரம் நுகர்வோர்Continue Reading

கொழும்பு கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஓரு விபச்சார விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விபச்சார விடுதியிலிருந்து03 பெண்களும் செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகியContinue Reading

இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் போசாக்கின்மை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது. குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரட்ண இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.Continue Reading