இன்று (10) முதல் மில்கோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும். இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading

பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் அங்கிருந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் மசாஜ் நிலையத்தில் இருந்த ஐந்து பெண்களை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து அவர்களின் கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், சந்தேகContinue Reading

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது. இலங்கை பல தசாப்தகால மோதல்களினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தியதாகவும்,Continue Reading

இலங்கையில் கடவுச்சீட்டுக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது. இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே மக்கள் நீண்ட வரிசைளில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் எனContinue Reading

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.Continue Reading

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.Continue Reading

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கானContinue Reading

இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் அந்தப் பதவிகளை விட்டு விலகத் தயாராகி வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அந்த ராஜாங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்க்ஷ அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த,Continue Reading

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபாவாக உயர்த்துவேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ”அதற்கான சட்டங்களும் ஒழுங்குகளும் தயாரிக்கப்படும். அதேபோன்று ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனமும் தயாரிக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனது கொள்கை அறிக்கையில் வலுவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுContinue Reading