இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். பின், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் எனContinue Reading

தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. 1974ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி ஹீரோவானார். இவருடைய படங்களில் வரும் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருந்தாலும் கூட அதனை ரசிகர்கள் கொண்டாட துவங்கிவிட்டனர். இவர் கையசைத்தால் ரயில் பின்னே செல்லும், காலால் எட்டி உதைத்தால் வேகமாக முன் நோக்கி வரும் கார் கூட பின் நோக்கி சென்று விடும். இப்படிContinue Reading

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வரலாற்றில் பதிவாகும் வகையில் பாரியளவில் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்Continue Reading

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில், நாடு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றால், இந்த நிலைContinue Reading

பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்துள்ளதாக அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெற்றுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை இவர் தாங்கியுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறுContinue Reading

அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை விமானப்படை உடனான நீண்டகால ஒத்துழைப்பின் காரணமாக பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானம் ஒன்றே அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் 2022 இன் பிற்பகுதியில் நிறைவு செய்யப்பட்ட நிலையில் ரேடார் மற்றும் கமராக்கள் போன்ற கடல் உந்துவிசை சென்சார் உள்ளிட்ட கூடுதல் மேம்படுத்தல்களுடன் 2024Continue Reading

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இலங்கை பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்தின் சிறுவர் சுரண்டல் எதிர்ப்புக் குழுவின் விசாரணையாளர்களை இது தொடர்பில் சந்தித்துள்ளனர். இணையங்களில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து எதிர்த்துப் போராடுவதில், இலங்கை பொலிஸின் சர்வதேச வலையமைப்பு முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பெண்கள் மற்றும்Continue Reading

அழகானவர்களிடம் தள்ளி இருக்க மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனா அரசு அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம். ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம். வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருக்கின்றனர் என்று தேசியப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒருவரைContinue Reading

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. அடுத்து மீண்டும் அதே கூட்டணி சேர இருப்பதாகவும் அதற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் முன்பே வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். டான் படத்தை போலவே பாஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்திContinue Reading

தமது நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது. எனினும் சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறினாலும், தடைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது. இதன் விளைவாக, மிக நீண்டContinue Reading