பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்..!!

பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்துள்ளதாக அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை இவர் தாங்கியுள்ளார்.

இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு பிரான்ஸ் அரசாங்கங்களில் பதவிகளை வகித்த இவர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *