அதிரடியாக கூடாரங்களில் இடம்பெயர்ந்துள்ள லெவண்ட் மக்களை சந்தித்த செந்தில் தொன்டமான்

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட லெவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக கூடரங்களில் வாழும் மக்களை பார்வையிட இன்று பிரதமரின் இணைப்பு கௌரவ செயலாளர்  செந்தில் தொன்டமான் இன்றைய தினம் வருகை தந்திருந்தார்

அவருடன் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளரும் பொதுஜன ஐக்கிய முன்னணி கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா விக்ரமசிங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர் கௌரவ பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் அவர்கள் மண்சரிவு அபாயகரமான லயன் குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்துக்கு மேற்பட்ட காலமாக தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களிடமும் கலந்து உரையாடினார் மேலும் அவர் பேசுகையில் லெவன்ட் தோட்டத்தில் மக்களுக்கு காணி ஒதுக்கீடு செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்

தோட்டங்களில் கம்பெனிகள் அராஜகத்தின் உச்சகட்டத்தில் மக்களை வழி நடத்துவதாக தனி ராஜ்ஜியம் நடத்துவது போல் மக்களை வழி நடத்துவதாகவும் இவ்வாறு வழி நடத்தாமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்

ஒரு மாத காலமாக எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்களுக்கு வேலை நிறுத்தம் செய்து இருப்பதாகவும் அது தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்தார் மேலும் ஊடகவியலாளர் கேள்விகளுக்கும் பதிலளித்தார் தோட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 22 கிலோ தேயிலை எடுக்கும் மாறு வருவதாகவும் அதைவிட தேயிலை குறைவாக இருந்தால் அரை பேர் வழங்குவதாக மக்கள் குற்றம் கூறுவதாக கேட்ட கேள்விக்கு செந்தில் தொண்டமான் பதிலளித்தார்

ஒப்பந்தத்தில் ஒரு நாளைக்கு தோட்டத் தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்தால் 1000/= ரூபாய் சம்பளம் கண்டிப்பாக வழங்க வழங்க வேண்டும் அரை பேர் வழங்க முடியாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

thedalmedia.com

Next Post

சிரச தொலைக்காட்சியின் ஒளிபரப்பு குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது உண்மை – அமைச்சர் ரம்புக்வெல 

Mon Jul 12 , 2021
சிரச தொலைக்காட்சியின் ஒளிபரப்பு குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது உண்மை – அமைச்சர் ரம்புக்வெல சிரசதொலைக்காட்சியின் செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசனைகளை முன்னெடுத்ததை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.   சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு உள்ள உரிமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நான் எதனையும் இரகசியமாக செய்யவில்லை ஊடகங்கள் எந்தவித […]

You May Like