விசிகவுக்கு பானை சின்னம் வழங்க ஆணையம் மறுப்பு…!!

இந்தியா: தமிழ்நாடு

மக்களவை தேர்தலில் தங்களுக்கு பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது. ஆனால், ‘கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது’ என்று ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்தது. 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத வாக்குகள் பெற்றதாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட விசிக திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமரின் நாடகங்கள் மக்களுக்கு புரியும் - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்..!!

Thu Mar 28 , 2024
இந்தியா: தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறோம். அந்த வகையில் உங்கள் குடும்பங்களில் ஒருவன் என்ற முறையில் உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளேன். திமுகவின் அடிப்படை கொள்கை […]

You May Like