அழகு போட்டியில் வெற்றிப்பெற்ற 60 வயது பெண்…!!!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் அழகுப் போட்டியில் வெற்றி பெற்று உலக கவனத்தை ஈர்த்துள்ளார்.

60 வயதில் சாதாரணமாக நடிப்பதை இந்த வயதிலும் வியப்புடன் பார்க்கும் சூழலில், உடலையும் மனதையும் இணைத்து அழகுப் போட்டியில் பட்டம் வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவிலிருந்து போட்டியிட்ட ரோட்ரிக்ஸ், தொழில் ரீதியாக வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர். இந்த சாதனையின் மூலம், அவர் தனது வயதில் அழகு விருதை வென்ற முதல் பெண்மணி ஆனார்.

மே மாதம் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினாவிற்கான தேசிய போட்டியில் பியூனஸ் அயர்ஸை பிரதிநிதித்துவப்படுத்த அவர் தகுதி பெற்றுள்ளார்,

மேலும் அவர் வெற்றி பெற்றால், அவர் உலகளாவிய பிரபஞ்ச அழகி போட்டிக்கு தகுதி பெறுவார். இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை

Sun Apr 28 , 2024
நாட்டின் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோய் தொற்றா நோயாகக் காணப்பட்ட போதிலும், பரம்பரை ரீதியாக, அல்லது நீண்ட கால அடிப்படையில் இந்த நோய் உருவாகலாம். இலகுவான மற்றும் […]

You May Like