புதினின் 2 மகன்களும் மறைந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு அவரது காதலியான அலினா கபேவாவுடன் இரண்டு மகன்கள் உள்ளனர். இவான் (9) மற்றும் விளாடிமிர் ஜேஆர் (5). அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இளவரசர்களைப் போல ஸ்விட்சர்லாந்தில் வளர்க்கப்படுகிறார்கள். பொதுவெளியில் தோன்றுவது இல்லை. சொகுசு படகுகளிலும் பிரைவேட் ஜெட்களிலும் பயணிக்கின்றனர். வீட்டிலேயே பாடம் கற்கின்றனர். தென்னாப்பிரிக்காவைச்Continue Reading

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது, இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் ஆண்டுக்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களைப் பெறுகிறார் என்று நியூயோர்க் போஸ்ட் கூறியது,Continue Reading

கென்யாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கென்யா நாட்டில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகினறனர். பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 5ம் திகதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.Continue Reading

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். முன்னதாக இத்தாலிக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மெலோனி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது, “சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது. இதன் காரணமாகவே, ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்றContinue Reading

சீனாவில் மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு புதிய வகை வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Wetland virus (WELV) வெட்லேண்ட் என்ற வைரஸ் முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸினால் மங்கோலியாவில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளார். காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு காணப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் சற்று சந்தேகத்திற்குரியதாகContinue Reading

கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது உள்நாட்டு தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். இந்நிலையில் தலிபான்கள் தொடர்ந்து அங்குள்ள ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில்Continue Reading

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அமெரிக்க பெண் உயிரிழந்தால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில்,Continue Reading

சீனாவின் விலங்குப் பண்ணைகளில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 36 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் முயல்கள், குரங்குகள், நரிகள், ராக்கூன் நாய்கள் போன்ற தோலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் புதிய வைரஸ்களுக்கான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.Continue Reading

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர். இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாகContinue Reading

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் மிகப் பெரிய துளை ஒன்று இருக்கிறது. இதை ஆய்வாளர்கள் “நரகத்தின் நுழைவாயில்” என்று அழைக்கிறார்கள். இந்த “நரகத்தின் நுழைவாயில்” பருவநிலை மாற்றத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக விரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நரகத்தின் நுழைவாயில் யானா ஹைலேண்ட்ஸ் அமைந்துள்ளது. இது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாகும்.. ஸ்டிங்ரே மீன் வடிவத்தில் இருக்கும் இது தொடர்ந்து விரிவடைந்து வருகிறதாம். 1960களில் இதுContinue Reading