கடவுள் உதவி செய்தால் நாங்கள் வெல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், “இன்று லெபனானில் உயிரிழந்த எமது மாவீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் அவர்களின் இரத்தத்தை ஆசீர்வதிக்கட்டும். நம்மை அழிக்க முயற்சிக்கும், ஈரானின் தீய நிலைக்கோட்டிற்கு எதிராக கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.” “இது நடக்காது – ஏனென்றால் நாம்Continue Reading

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் பென்சில்வேனியாவில் இன்றையதினம் பிரசாரம் செய்த டிரம்ப், நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், பொலிஸார் கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பல்வேறு விடயங்களில் ஜோ பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும், எல்லைContinue Reading

தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.Continue Reading

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. இதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (01) அந்நாட்டு பாராளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்Continue Reading

அமெரிக்காவில் நீண்ட காலம் உயிர் வாழும் முன்னாள் ஜனாதிபதி என்ற சாதனையை ஜிம்மி காட்டர் நிலைநாட்டியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஜனாதிபதி என்ற சாதனையை காட்டர் தானதாக்கிக் கொண்டுள்ளார். காட்டர் இன்றைய தினம் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டர் பிறந்த இடமான ஜோர்ஜியாவின் பிளேயின்ஸ் பகுதியில் தனது நூறாம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். கட்டாருக்கு அமெரிக்காவின் சில முன்னாள் ஜனாதிபதிகள்Continue Reading

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்ப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.Continue Reading

யாகி சூறாவளியால் வியட்நாமில் 64 பேர் பலியானதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது. மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாகContinue Reading

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.Continue Reading

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குரங்கு அம்மை தொற்று 116 நாடுகளில் பரவியுள்ளது. எனவே, இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியாContinue Reading

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் ‘X’ தளத்தில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவில் கமலா ஹரிஸ், தனது தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். எனினும், அவரின் தாத்தாவான P.V. கோபாலன், இந்தியாவை பிரித்தானியா ஆட்சி செய்த போது, இந்திய பொலிஸ் துறையில் பணியாற்றியவர் ஆவார். ஆகவே, அவர் எவ்வாறு பிரித்தானிய அரசுக்கு எதிராக செயற்பட்டிருப்பார்Continue Reading