கமலா ஹாரிஸும் மனநலம் பாதிக்கப்பட்டவரா? – டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

குறித்த ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் இன்றையதினம் பிரசாரம் செய்த டிரம்ப், நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், பொலிஸார் கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பல்வேறு விடயங்களில் ஜோ பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும், எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கமலா ஹரிஸால் எதையும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திருடர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறிய அவர், ‘இந்த விடயத்தில் பொலிஸார் முரட்டுத்தனமாக செயல்படவேண்டும்.

குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டவேண்டும். ஆனால், பொலிஸார் தங்கள் பணியை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனென்றால், தாராளவாதிகள் அவர்களை அனுமதிப்பதில்லை. ஏனென்றால், தாராளவாதிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள்’ என்றார்.

மேலும் ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிஸும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

இதேவேளை, லாஸ் வேகாசில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், எல்லைப் பாதுகாப்பில் உள்ள கடுமையான பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் குடியேற்ற சீர்திருத்தத்தின் அவசியம் என தனது வழக்கமான பாணியில் உரையாற்றினார்.

மேலும், டிரம்ப் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாட்டார் என்பது நமக்கு தெரியும். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, நமது குடியேற்ற அமைப்பை சரிசெய்ய எதுவும் செய்யவில்லை’ என்றும் கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *