தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதவான் ச்சானிமா விஜய பண்டார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்படி, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டContinue Reading

இலங்கையில் உள்ள பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இவ் விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று (07) குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த யூலை மாதம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகContinue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்Continue Reading

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக ரீதியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை சில சபைகளுக்கு ஏற்கனவே புதிய தலைவர்கள்Continue Reading

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின்Continue Reading

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, 2வது இடத்தில் கிரீஸ், 3வது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் 4வது இடத்தில் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. குறித்த தரவரிசை பட்டியல் CEOWORLD என்ற இதழ் 95,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத தொடருந்து பயணங்கள் அல்லது தேயிலைத்Continue Reading

இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழுவினை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு உக்ரேனிய சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே இரகசிய பொலிஸாரால்Continue Reading

இலங்கை எதிர்நோக்கக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜுலி கொஸாக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வொஷிங்டனில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 12ம் திகதி இரண்டாம் மீளாய்வின் போது பொருளாதார கொள்கைகளை நடைமுறைபடுத்துவதற்காக 336 மில்லியன் டொலர்கள் கடன் வழங்கப்பட்டது.Continue Reading

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று (04) இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில்இலங்கை ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஜ்னாதிபதி அனுர, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம்Continue Reading