முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.Continue Reading

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1753 குடும்பங்களைச் சேர்ந்தContinue Reading

சர்ச்சைக்குரிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. மூன்று விடயங்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் பரிசீலனை உடனடியாக தொடங்கப்படContinue Reading

இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார். அதேவேளை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றுவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர்Continue Reading

இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க – பசுபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் குறித்த விமானத்தை உத்தியோகபூர்வமாக நேற்று (11) கையளித்தார். இந்த நிகழ்வில்அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த, இலங்கைContinue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றுள்ளது. இதன்போது, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பைContinue Reading

தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மிகவும் மும்முரமாகவும் பரபரப்பாகவும் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைய நாட்களில் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர். இதன்போது பல நாடுகளின் அரச தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமன்றி ஆதரவையும் வழங்கியமை விசேட அம்சமாகும். அதிகளவான வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலிContinue Reading

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்Continue Reading

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது 4.4 சதவீத பொருளாதார வேகத்தை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக தீர்வு காண முடிந்தால்,Continue Reading

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாகContinue Reading