இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்தில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ர். இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளரான எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகோந்தவுடன் இது தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லContinue Reading

இலங்கையில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடமேற்கு மாகாண கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, குருநாகல் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சித்ரன் ஹத்துருசிங்க இதை குறிப்பிட்டார். 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2003 முதல், எச்.ஐ.வி எய்ட்ஸ் பரவுவது படிப்படியாக அதிகரித்துContinue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை இதுவே முதல்தடவை ஆகும். முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் நாட்டின் அரசியலின் தற்போதைய நிலை அது செல்லும் பாதை தனது எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை தேசிய பட்டியல்Continue Reading

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற மாட்டார்கள் என்று அவர் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கூறிய மஹிந்த, அனைத்தும் தயாராக இருப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலகுவான வெற்றியைப் பெறும் எனவும் தெரிவித்தார். அரசியல்வாதிகள்Continue Reading

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி விசேட அமைச்சரவை கூடி கடவுச்சீட்டு தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். புதிய வழங்குனர் ஒருவரிடமிருந்து 750,000 புதியContinue Reading

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும். வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுContinue Reading

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியூர்களில் இருந்து வியாபாரிகளின் வருகை குறைவடைந்துள்ளதையும், மரக்கறி தோட்டங்களுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலையும் இதற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழையால் பயிர்கள் நாசமாகி, அறுவடை செய்வதில்Continue Reading

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசின் நடவடிக்கைகள், பொதுத் தேர்தல் முடியும் வரை புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் பொது நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைத்தது, அதன் கீழ் 130 பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பிற்காக பட்டியலிடப்பட்டன. எனினும் பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனContinue Reading

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (Brics) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும் விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கசான் நகரில்Continue Reading

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.Continue Reading