அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்..!!

இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க – பசுபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் குறித்த விமானத்தை உத்தியோகபூர்வமாக நேற்று (11) கையளித்தார்.

இந்த நிகழ்வில்அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த, இலங்கை விமானப்படையின் கட்டளைத் தளபதி எயா மாஷல் உதேனி ராஜபக்‌ச ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு விமானம் வழங்கப்பட்டமையானது நீண்டகாலமாக நீடித்திருக்கும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையின் ஒரு குறியீடாகவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பலப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் விளங்குகிறது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட King Air விமானமானது அதி நவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்டமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் ரோந்து செல்வதற்கான, கடல்சார் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான மற்றும் இந்து சமுத்திரத்திலுள்ள மிகமுக்கியமான வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறன்களை பலப்படுத்துவதற்கு இந்த விமானம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *