அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற மாட்டார்கள் என்று அவர் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கூறிய மஹிந்த, அனைத்தும் தயாராக இருப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலகுவான வெற்றியைப் பெறும் எனவும் தெரிவித்தார். அரசியல்வாதிகள்Continue Reading

மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் தனது வயது 86 வயதில் அண்மையில் உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தன் டாடாவின் பூதவுடல் மும்பையில் உள்ள வொர்லிContinue Reading

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் வரும் நடிகர்களில் ஒருவர் தான் கருணாகரன். சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் அறிமுகமானவர் சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, லிங்கா, இறைவி, ஒருநாள் கூத்து என 25க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இப்போது நடிகர் கருணாகரனை பற்றி பட தகவலை தாண்டி சொந்த விஷயம் குறித்து ஒரு செய்தி வலம் வருகிறது. பிரபலங்களின்Continue Reading

கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட விண்கலங்களில் மிகப்பெரியதான நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலமானது, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. யூரோபா கிளிப்பரினால், ஈர்ப்பு உதவிகளை பயன்படுத்தி 1.8 பில்லியன் மைல்கள் பயணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2030ஆம் ஆண்டில், வியாழனை அடைந்த பிறகு, அது யூரோபாவில் வாழக்கூடிய நிலத்தடி கடலை பற்றி ஆராயContinue Reading

பாடகி சுசித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னதாமரை பாடல் உட்பட சுமார் 1500 பாடல்களை அவர் பாடி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக சுசித்ரா கூறும் கருத்துகள் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்து இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி கூறிய கருத்து சர்ச்சை ஆனது. அதை எதிர்ச்சி அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய பல்வேறு ரகசியங்களையும் சுசித்ரா வெளியிட்டுContinue Reading

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரில் கொலை சம்பவத்தை அடுத்து, இந்தியா – கனடாவுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (14) வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்,Continue Reading

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி விசேட அமைச்சரவை கூடி கடவுச்சீட்டு தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். புதிய வழங்குனர் ஒருவரிடமிருந்து 750,000 புதியContinue Reading

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல நடிகைகளை இப்போதும் மக்கள் மறக்காமல் உள்ளார்கள். அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா, இவர் கேரளாவை சேர்ந்தவர். 5 வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார். பின் தமிழ் பக்கம் வந்து முதன்முதலாக நாயகியாக எல்லாமே என் ராசா தான் என்ற படத்தில் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் சில வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஒரு கட்டத்தில் 2000ம் ஆண்டுContinue Reading

வலுபெற்றுவரும் கொரிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களுக்கு மத்தியில், தென்கொரியாவுடனான முக்கிய இணைப்புப்பாதைகளை வடகொரியா வெடிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது நாட்டு வான்பரப்புக்குள் தென்கொரியா ட்ரோன்களைப் ஏவியதற்காக இந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரிய இராணுவம் கடந்த வாரம் அதன் தெற்கு எல்லையை நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதியளிப்பின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவை தனது நாட்டின் முதன்மைContinue Reading

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும். வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுContinue Reading