விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெயின்’. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டிற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. பாண்டிராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தினை சத்யஜோதி நிறுவனம்Continue Reading

கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது உள்நாட்டு தாலிபான்கள் என்பவர்கள் யார் என்றால் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். இந்நிலையில் தலிபான்கள் தொடர்ந்து அங்குள்ள ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாதுது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா மட்டுமே அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. ஹோட்டலில்Continue Reading

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிக்கல்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனால் அஜித்தும் கோபமாகி ‘குட் பேட்Continue Reading

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வில்லனாக நடித்து இருந்தவர் விநாயகன். மலையாளத்தில் பிரபல நடிகரான அவர் ஏராளமான படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் அவரது நடிப்பும், அவர் பேசிய விதமும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் அங்கு சென்றுContinue Reading

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அமெரிக்க பெண் உயிரிழந்தால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில்,Continue Reading

சீனாவின் விலங்குப் பண்ணைகளில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 36 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் முயல்கள், குரங்குகள், நரிகள், ராக்கூன் நாய்கள் போன்ற தோலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் புதிய வைரஸ்களுக்கான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.Continue Reading

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.Continue Reading

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர். இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாகContinue Reading

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கானContinue Reading