இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்படத்திற்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் இலங்கை ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில் திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக புதன்கிழமையிலிருந்து (09) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும்Continue Reading

இந்த வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்பார்க்கைகளை விட இது இரட்டிப்பாகும். சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறைகளின் வலுவான செயற்றிறன் மூலம் இந்த வளர்ச்சி அடையப்படும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது. எனினும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மீட்சி பலவீனமாக உள்ளது எனவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்கொண்டு செல்லContinue Reading

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் (07) ‘கிம் ஜாங் உன்’ பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.Continue Reading

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் லெபனானுக்கு வேலைக்காகச் சென்ற இலங்கையர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கால அவகாசம் எதிர்வரும் 08-01-2025ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் நிலையை சரிசெய்து கொள்ள முடியுமென வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.Continue Reading

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது தனுஷிற்கு ஜப்பானில் நவம்பர் மாதம் திருமணம் நடத்த உள்ளார். திருமண தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வேலைகளை கவனிப்பதற்காகContinue Reading

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதுContinue Reading

காசா முனை மீது இஸ்ரேல் ஓராண்டாக அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த தாக்குதலில் இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42,010 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97,720 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பதுContinue Reading

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக , ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன்Continue Reading

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சட்டமா அதிபர் மற்றும் பதில் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமாContinue Reading

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Continue Reading