உலகின் மிக குறுகிய நேர விமானசேவை – எந்த நாட்டில் தெரியுமா..?

உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் (UK) ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது.

Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப் பயணமானது, ஸ்கொட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே ஆகிய தீவுகளுக்கு இடையே இயக்கப்படுகின்றது.

இந்த சேவையின் பயணம் வெறும் 1.5 நிமிடங்களில் முடிவடையும். இருப்பினும் சில வேளைகளில் 53 வினாடிகளிலும் நிறைவு பெறுகின்றது.

1967ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, உலகின் மிக குறுகிய திட்டமிட்ட விமானப் பயணம் என்னும் பெயரை பெற்றுள்ளது.

Westray மற்றும் Papa Westray தீவுகளுக்கு இடையே தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சனிக்கிழமை நாட்களில் ஒரு சில விமானங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

வெறும் 1.7 மைல்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம், எடின்பர்க் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளத்துக்கு சமம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *