இந்தியாவில் தொடரும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் – இலக்கு வைக்கப்பட்டுள்ள 50 விமானங்கள்..!!

இந்தியாவில் நேற்று (22) காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகி அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 2 – 3 நாட்களில் வெவ்வேறு விமானங்களை குறிவைத்து பல அச்சுறுத்தல்கள் விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. எனினும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சிறுவன் ஒருவனை தவிர வேறு எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதேநேரம், இதுபோன்ற அச்சுறுத்தல்களை அனுப்புபவர்களை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் வரையான காலப்பகுதிக்குள் இண்டிகோ விமான நிறுவனம் தனது 10 விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியிருந்தது.

இதன் காரணமாக, குறைந்தது மூன்று விமானங்கள் இலக்கு பயணங்களில் இருந்து மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. ஆகாசாவின் பெங்களூர் – வாரணாசி விமானத்துக்கும் இன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அச்சுறுத்தல்கள் தமக்கு கிடைத்ததாக எயார் இந்தியா தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *