10 கோடி சம்பளம்!! – 34 வயதான ராக்ஸ்டாரின் அனிரூத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, இந்தி சினிமா படங்களுக்கு இசையமைத்து தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

சமீபகாலமாக வெளியாகும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு அனிரூத் தான் அதிகம் இசையமைத்து வருகிறார்.

அந்தவகையில், அவரின் இசையில் வேட்டையன் விடாமுயற்சி, தேவரா, இந்தியன் 3, கூலி, தளபதி69ஜெர்சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத், ஏ ஆர் ரகுமானின் சம்பளம் 8 கோடியைவிட அதிகமாக வாங்குவதாக கூறப்படுகிறது.

அப்படி அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக பெறுகிறாராம். அப்படி அனிரூத் 34 வயதில் 70 கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

BMW, PORSCHE உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி ஹோட்டல் தொழிலை செய்துவரும் அவருக்கு அதன் மூலமும் வருமானம் கொட்டுவதாகவும்; கான்செர்ட் மூலமும் நல்ல பணம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *