கேரள பாலியல் சர்ச்சை : உனக்கு அறிவு இருக்கா? செய்தியாளரை திட்டிய நடிகர் ஜீவா!

தேனியில் நடிகர் ஜீவா செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை நடிகர் ஜீவா சந்தித்தார்.

அப்போது கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ,”கேரளாவைப் போலத் தமிழ்த் திரையுலகில் பாலியல் சர்ச்சை இல்லை எனவும், இந்தக் கேள்விக்கு ஏற்கனவே தான் பதில் அளித்திருப்பதாகக் கூறினார் .

மேலும் நல்ல நிகழ்ச்சிக்கு வந்த தன்னிடம் இது போன்ற அபசகுனமான கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனக் கூறினார். அப்போது “நீங்கள் நடிகர் என்பதால் தான் கேரளத் திரையுலகில் எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டோம்” என்று செய்தியாளர் கூறினார் .

இதனால் கோபமடைந்த நடிகர் ஜீவா, “திரும்பத் திரும்ப பதில் சொல்ல முடியாது.. உனக்கு அறிவு இருக்கா?” என ஒருமையில் பேசினார். இதனால் நடிகர் ஜீவாவிடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *