காசா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளின் சடலங்கள் – கடும் சீற்றத்தில் அமெரிக்கா..!

காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ரஃபா பகுதியில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கார்மல் காட், ஈடன் யெருஷால்மி, ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின், அலெக்சாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் ஓரி டானினோ ஆகிய பணயக்கைதிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் கோல்ட்பர்க்-போலின் என்பவர் ஒரு அமெரிக்க குடிமகன் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே பைடன் “சம்பவம் தொடர்பில் சீற்றமாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான முன்னோடியில்லாத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ஒரு தாக்குதலை தொடங்கியது.

இதன் போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அன்றிலிருந்து காசாவில் 40,530 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *