‘விஜய் 69’-ல் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ்..!

ஹெச்.வினோத் இயக்கும் விஜய்யின் 69-வது படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு அப்டேட்டாக படத்தில் பிரகாஷ் ராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கில்லி’, ‘சிவகாசி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘வாரிசு’ என விஜய் – பிரகாஷ்ராஜ் காம்போ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. 5 ஆம் திகதி முதல் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கு ஒன்றில் படமாக்க உள்ளார்கள். அதனை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் ஹெச்.வினோத். அது முடிவானவுடன் அந்த அரங்கின் பணிகள் தொடங்கவுள்ளது. படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *