42 வயதில் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா..??

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனுஷ்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மார்க்கெட்டை இழந்தார்.

ஆனால், மீண்டும் கம் பேக் கொடுக்க போராடிக்கொண்டு இருக்கிறார். விரைவில் அனுஷ்கா நடிப்பில் மலையாளத்தில் இருந்து படம் ஒன்று வெளிவரவுள்ளது. இதற்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து பல முறை பலவிதமான செய்திகள் உலா வந்துள்ளது. ஆனால், அவை யாரும் அனுஷ்காவின் தரப்பில் இருந்து அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படவில்லை.

அதே போல் பிரபல நடிகர் ஒருவரை அனுஷ்கா காதலித்து வந்ததாகவும், ஆனால், இவர்கள் காதல் இன்னும் திருமணம் வரை வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அந்த நடிகருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லையாம்.

இந்த நிலையில், துபாய் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஆனால், இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *