தளபதியின் கோட் படத்தை பார்க்க ஜோடியாக வந்த நயன் மற்றும் விக்கி..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது தி கோட் திரைப்படம்.

இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நாளே பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 126.32 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 400 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், இந்த வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆன தினத்திலேயே நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து படம் பார்க்க வந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *