இந்திய விமானப் போர் பயிற்சியில் இலங்கையின் பீச்கிராஃப்ட் விமானம்..!!

இந்தியாவில் (India) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விமானப் போர் பயிற்சியான “தரங் சக்தி”யின் (TARANG SHAKTHI) தொடக்கப் பதிப்பில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் (Beechcraft) விமானம் பங்குபற்றி வருகின்றது.

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த பயிற்சியில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் 18 நாடுகளின் பார்வையின் கீழ் பங்குபற்றி வருகின்றன.

இதற்கமைய, தாரங் சக்தியின் முதல் கட்டம், இந்தியாவின் தமிழ்நாடு – சூலூர் விமானப்படை நிலையத்தில் ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் 14 வரை நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டம் ஆகியன தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

இந்த நினைவுச்சின்னப் பயிற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமாக பங்கேற்கும் 70 – 80 விமானங்களில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட்அடங்குகின்றது.

உலக பாதுகாப்பு ஒத்துழைப்பில் நாட்டின் வளர்ந்து வரும் அந்தஸ்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்தியாவினால் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய சர்வதேச விமானப் பயிற்சியாக தரங் சக்தி உள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் பங்கேற்பானது, இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

அத்துடன், தாரங் சக்தியில் பீச்கிராஃப்டின் ஈடுபாடு இலங்கை விமானப்படை விமானக் குழுவினருக்கு விலைமதிப்பற்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *