பல சாதனையை முறியடித்த விஜயின் GOAT – பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான GOAT படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான வரவேற்பை பெற்றது.

இருப்பினும், பாகுபலி, 2.0, ஜெயிலர், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைத் தாண்டி மிகப்பெரிய வசூலாக உருவெடுத்துள்ளது.

இது வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் 43 கோடி ரூபாயிற்கு வசூல் பெற்றுள்ளது. இப்படம் தமிழில் ரூ.38.3 கோடியும், இந்தியில் ரூ.1.7 கோடியும், தெலுங்கில் ரூ.3 கோடியும் வசூலித்துள்ளது.

இந்த படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் மிகப்பெரிய தமிழ் தொடக்கப் படமாக உருவெடுத்தது.

தளபதி விஜய்யின் படம் பல சாதனைகளை முறியடித்துள்ளது மற்றும் விக்ரம் (ரூ 29 கோடி), ஜெயிலர் (ரூ 37.6 கோடி), 2.0 (ரூ 23 கோடி) உள்ளிட்ட மற்ற தமிழ் பிளாக்பஸ்டர்களின் முதல் நாள் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்கி அமரன் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

380 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசிப் படம் என்று கூறப்படுகிறது.

மேலும் விஜயின் இறுதி படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *