விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி சுமார் 7 சீசன்களை கடந்து சென்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் இருந்து தான் கால்ஷீட் காரணமாக விலகியுள்ளதாகவும் 8வது சீசனுக்காக வாழ்த்துக்கள் கூறி அறிக்கை வெளியிட்டார் கமல் ஹாசன்.
அவர் இடத்தினை யார் பிடிப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சிம்பு, பார்த்திபன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பெயர் இடம்பெற்றது.
அதேபோல் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற தகவல் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
கமல் ஹாசன் இடத்தினை நடிகர் விஜய் சேதுபதி தான் நிரப்பவிருக்கிறார் என்ற புது பிரமோ வீடியோவை வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. என்னாதான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினாலும் கமல் இடத்தினை பிடிப்பது என்பது கேள்விக்குறி தான் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 7 கோடி வரை சம்பளமாக கமல் ஹாசன் வாங்க மொத்தம் 100 கோடி வரை சென்றிருக்கிறது.
ஆனால் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்க ஒரு எபிசோட்டிற்கு 3 கோடி ரூபாய் பேசப்பட்டு 50 கோடிக்குள் சம்பளத்தை விஜய் டிவி முடித்துள்ளனர். இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.