ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி

ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பிணைக்கைதி இளைஞர்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பலர் பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் (23) என்ற இளைஞர், ரஃபாவின் கீழ் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் சேர்ந்து 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும், அவர்களை அடையாளம் காண பல மணிநேரம் ஆனது என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக Axios செய்தி வெளியிட்டுள்ளது.

கோல்ட்பர்க்-போலின் எப்படி அல்லது எப்போது கொல்லப்பட்டார் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அவரின் குடும்பத்தினர் மரணம் குறித்த அறிக்கையை வெளியிட்டனர். உடைந்த இதயங்களுடன், கோல்ட்பர்க்-போலின் குடும்பம் தங்கள் அன்புக்குரிய மகனும், சகோதரனுமான ஷெர்ஸின் மரணத்தை அறிவிப்பதில் பேரழிவிற்கு ஆளாகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *