உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் அட்டவணையில் முன்னேறிய இங்கிலாந்து..!!

2023-25 ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் அட்டவணையில் இங்கிலாந்து அணியின் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

லோர்ட்ஸில் 190 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டதன் மூலம் அந்த அணி 45 மொத்த புள்ளிகளை பெற்று அட்டவணையில் முன்னேறியுள்ளது.

இந்தநிலையில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அடுத்து நான்காவது இடத்தில் அந்த அணி தரப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், இலங்கை அணியின் தோல்வி, அந்த அணியின் புள்ளி சதவீதத்தை 40 இலிருந்து 33.33வீதமாக குறைத்துள்ளது

இதன் காரணமாக அட்டவணையில ஏழாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் முழுமை அட்டவணையின்படி, முதல் 10 இடங்களில் இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்து வரும் இடங்களை அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி என்பன பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *