வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்தில் இளைஞர் மரணம்
வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்தில் இளைஞர் மரணம்
கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற லாரி ஒன்று புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியது
இன்று காலை லாரி ஒன்று வேகத்தில் சென்றதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது விபத்துக்குள்ளாகி அடுத்து வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார் சாரதி படு காயங்களுடன் வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவ்வாறு மரணம் அடைந்தவர் மஸ்கலியா லெச்சுமித் தோட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி பிரவின் என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்