நா.முத்துக்குமார் – யதார்த்த கவிஞன்..
தினம் தினம் பல புது புது பிரச்சினைகளை துரத்தி கொண்டு செல்கையில்
சில கவிதைகளை படிக்கையில்,
சில பாடல்களை கேட்கையில்
நாம் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற
வாழ்கையை சில மணித்துளிகள் பின்னோக்கி இட்டு சென்று இனிமையான தருணங்களை மீட்டுருவாக்கும்,நாம் கவனிக்க மறந்த சில இனிமையான நிகழ்வுகளை,அழகியலை,வாழ்வியலை,கல்லூரியை, காதலை இனிமேலாவது
கவனிக்க சொல்லும்..அப்படிப்படட கவிதைகளை அதிகமாய் அள்ளி கொடுத்தவர் ஆசான் நா.முத்துதுக்குமார்.
நடைபாதை கடையில் காதலியின் பெயர் பார்த்தால் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை கவிதையாய் வடித்தவர்..
மின்சார கம்பிகளில் மீது மைனாக்கள் கூடு கட்டுவதை கூட காதலுடன் கலந்து இவரால் கவிதையாக முடியும்..
இவரின் சில கவிதைகளில் யாரை வேண்டுமானாலும் பொருத்தி பார்த்து
காதல் கொள்ள முடியும்..
உதாரணமாக,
கடவுளை பார்த்ததில்லை..
இவளது கண்கள் காட்டுதே..
சாமி பாரர்த்து கும்பிடும் போதும்
நீ தானே நெஞ்சில் இருக்க..
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி..
உன்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை..இன்னும் வேண்டுமடி..
இந்த வரிகள் மகள்,காதலி,மனைவி, தாய் என யாவருக்கும் பொருந்தும்.
கல்யாணம் ஆகாத,வேலை தேடிக்கொண்ண்டிருக்கிற, கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்குற இளைஞர்களுக்கு Mansion – களே சொர்க்க பூமி.ஆனால்,அவர்கள் படுகின்ற இன்னல்களை,
சொல்ல முடியா துயரங்களை
கொஞ்சம் அழகியலோடு
“பெத்த முகம் வளத்த
முகம் மறந்து போச்சுங்க..
பாசம் மணி பர்ஸ் போட்டோவுல மறைஞ்சி போச்சுங்க..
அத்த பையன் மாமன்
மொற உறவு இல்லைங்க
ஆனாலும் நாங்க எல்லாம்
மாமன் மச்சான்க..”
என உள் உணர்வுகளை உயிரோடு பாடலாக்கியவர் நா.முத்துக்குமார்.
இவரின் பாடல்களில் சில வார்த்தைகளே வெவ்வேறு தருணங்களில் யதார்த்த வாழ்வியலை அழகியலோடு பிணைத்து காதல் சொல்லும்..
1)காதலில் மௌனம்
1a)பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா….
1b)கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்..
1c)இருமனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே..
என காதலில் மௌனத்தின் மொழியை கவியாக்கினார்..
2)முப்பொழுதும் உன் கற்பனைகள்
காதலின் தொடக்க நாட்களில் காண்பதெல்லாம் காதலியாக /காதலனாக உணரும் தருணங்களை
2a)என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..
2b)அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்..
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்..
2c)தினம் இரவினில்.. உன் அருகினில்..
உறங்காமல் உறங்கிப் போவேன்..
என முப்பொழுதுகளையும் காதலால் நிறைத்திருப்பார் கவிஞர்.
3)காதலில் பார்வை
காதலியின் ஒரு பார்வை போதும் பல இலட்சம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க,மனதுக்குள் பெரு வெடிப்பு நிகழ,
அவ்வாறான,காதல் பார்வையை கவிஞரும் கொண்டாட தவறவில்லை..
3a)நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்..
3b)நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்..
3c)நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி..
3d)உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை
என கொண்டாடி தீர்த்திருக்கிறார்..
4)காதலின் வாசனை
சிலருக்கு காலை Coffee – யின் வாசனை தான் அவர்களின் இருத்தலை உறுதி படுத்தும்.
குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாவின் வியர்வை வாசனையே மிக சிறந்த நறுமணம்..
அது போல காதலின் வாசனை பற்றி,
4a)மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா..
4b)வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்..
என கவிதையில் சற்று கூடுதலாக நறுமணம் சேர்த்திருப்பார்.
5)எங்கும் எதிலும் – காதல்
தனக்கு மிக பிடித்தமானவர்களின் புகைப்படங்களை பர்ஸ் – ல் வைத்து கொள்வது,அவர்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்வது காதலின் மற்றொரு பரிணாமம்.
அவர்களின் பெயர்கள் கேட்கும் பொழுது,அவர்களின் புகை படத்தை பார்க்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி குடிக்கொள்ளும்.
இவ்வாறான தருணங்களை கூட,
5a)நடை பாதை
கடையில் உன் பெயர்
படித்தால் நெஞ்சுக்குள்
ஏனோ மயக்கங்கள் பிறக்கும்..
5b)சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே..
என்ற வரிகளில் கவிதை புனைந்து அவர்பால் நம்மை பற்றி கொள்ள செய்திருக்கிறார் கவிஞர்.
6)ஒரு தலை காதல் (One side ❤️)
யாரையும் காதலிக்க சொல்லி தொந்தரவு செய்யாமல்,
என் கடன் காதல் செய்து கிடப்பது என தனக்குள் காதலித்து,உருகி,கண்ணீர் மல்கி,மகிழ்ந்து கொள்ளும் அற்புதமான உணர்வு..
கடலுக்கும் மழைக்கும் உள்ள காதல் போல,
காற்றுக்கு மரத்தின் மீதான காதல் போல,
பூக்களுக்கு நீரின் மீதான காதல் போல..
காதல் கவிதைகளில் கரை கண்டவர் ஒரு தலை காதலை பற்றி பாடாமல் இருப்பாரா என்ன..
ஆசானின் வரிகள்,
6a)காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது..
6b)காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை..
6c)நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோர கனவுகள் எல்லாம்..
என தன் கவிதைகளில் ஒரு காதலை
கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்..
6)நம்பிக்கை – தன்னம்பிக்கை
இறுதியாக,வாழ்வதற்கு தேவை நம்பிக்கை,ஒவ்வொரு நொடியும்
தன்னம்பிக்கை..
சில துன்பங்கள் இதுவே இறுதி என நினைப்பதும்,
சில தருணங்கள் இதுவே இறுதி அல்ல என நினைக்க செய்வதும் அவரவரின் தன்னம்பிக்கைகளே..
பல கவிதைகளில் தன்னம்பிக்கையை அதிகமாகவே விதைத்திருக்கிறார் கவிஞர்..
7a)வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்…
7b)நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே..
7c)எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ..
என்ற வரிகளில் அனைவருக்குமான வாழ்தலுக்கான வரிகளை படைத்தவர் இன்று நம்முடன் இல்லையென்றாலும்
ஆசானின் கவிதைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நம்மை சிரிக்க வைக்கும்,அழ வைக்கும்,காதலிக்க வைக்கும்,முழுமையாக வாழ வைக்கும்..❣️