டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த முறைமை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொண்டு வசதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் எனவும், அதன் பின்னர் நாட்டிற்கு தொடர்ந்து விநியோகம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அசௌகரியங்களுக்கு மன்னிப்புக் கோரினார்.
எரிசக்தி அமைச்சில் முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.