.தற்போதைய பொதுமுடக்கம் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படுமா.?

நாட்டின் கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி செயலாளர், மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீடிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நோயாளிகளின் எண்ணிக்கை, மரணங்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் இடவசதி மற்றும் வைரஸின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகளின் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் மருத்துவர் நிஹால் அபேசிங்க குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் விரைந்திருப்பதே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மூன்று வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் மேலும் 10 நாட்கள் முடக்கத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வைத்தியர் நிஹால் அபேசிங்க வலியுறுத்தியுள்ளார். (தமிழன்)

Next Post

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்* 

Tue Aug 24 , 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu