நிதி அமைச்சிலிருந்து கலால் வரித் திணைக்களத்திற்கு உத்தியோகப்பூர்வமற்ற முறையில், வழங்கப்பட்ட உத்தரவை அடுத்தே, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில இணையத்தளமான டெய்லி மீரர் செய்தி வெளியிட்டுள்ளது
கலால் வரித் திணைக்களத்தில் அனுமதிப் பெறப்பட்ட மதுபானசாலைகள் மற்றும் பீயர் மற்றும் வயில் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள
மதுபான விற்பனையில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவரினால், தொலைபேசி ஊடாக கலால் வரித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்
எனினும், நிதி அமைச்சிலிருந்து இதுவரை உத்தியோகப்பூர்வ எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளா
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று பிற்பகல் முதல் திறக்கப்பட்ட நிலையில், பெருமளவிலான நுகர்வோர் வரிசைகளில் காத்திருந்தது மதுபான போத்தல்களை கொள்வனவு செய்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.