சர்வதேச ரீதியில் வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேன்ஜர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் முடங்கியுள்ளன.
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான இவை உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், மிக விரைவில் வட்ஸ்அப் மீண்டும் இயங்குமென வட்ஸ்அப் நிறுவனம் தனது ருவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில் “சிலர் தற்போது வட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த சிக்கல்களை தீர்த்து இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றுள்ளது.
இதே போல பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தொடர்பு நிர்வாக இயக்குநர் ஆண்டிஸ்டோன், தனது டுவிட்டர் தளத்தில் சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாக பதிவிட்டுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த முடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் டெலிகிராம், சிக்னல் செயலிகளில் தங்களது தகவல்களை பகிர்ந்து வருகின்றன. இதற்கு முன் மார்ச் மாதம் 17 நிமிடங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.