கண்டியில் உள்ள தடுப்பூசி ஏற்றும் ஒரு மையத்தில் வயதான ஒரு பெண்ணிற்கு தவறுதலாக இரண்டு தடவை குற்றி மொடேர்னா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டியில் உள்ள Ogastawatta தடுப்பூசி மையத்தில் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் ஊசி போட்டபின் இரண்டாம் தடவையும் தவறுதலாக போடப்பட்டுள்ளது இதையடுத்து மயக்கம் , இயலாதநிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது கணவர் பேராதனை பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் நிஹால் வீரசூரியா தெரிவித்தார்.
இது உலகில் அறிவிக்கப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.