இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரும் அங்கு உயிழந்துள்ளார்.
கனகராயன்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்