இன்று (28) நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் தேவைப்படும் அடுத்த 15 மாதங்களில் 800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறுவர்களுக்கு உணவளிக்கும் மற்றும் 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு திட்டம் வழங்கவும் பாடசாலை மாணவர்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய இலங்கை சமூகங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் மூலம் நிதி வழங்கப்படுகிறது.